Thursday, March 19, 2009

தன் உதவியாளரையும் கோடீஸ்வரராக்கிய ரஜினி!

தன் உதவியாளரையும் கோடீஸ்வரராக்கிய ரஜினி!ரஜினி என்ற மனிதர் சொல்லி செய்ததைவிட சொல்லாமல் செய்த நன்மைகள் ஏராளம். திரைத்துறையில் ரஜினியின் உதவி பெற்ற அல்லது ஏதாவது ஒரு வகையில் ரஜினியால் வாழ்வு பெற்றவர்களே அதிகம்.
தன் எதிரிகளாகவே இருந்தாலும் தன்னை நம்பி வந்தால் வேறு யோசனையோ, அவர் முன்னர் செய்த தீமைகளையோ யோசித்துக் கொண்டிருக்காமல் உதவி செய்துள்ளார். அதையும் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்துள்ளார் ரஜினி. மன்சூர் அலிகானும், வேலு பிரபாகரனும் அவர்களாகவே முன்வந்து சொன்ன பிறகுதான் அவர்களுக்கு ரஜினி செய்த உதவிகளே வெளியில் தெரிய வந்தன.
மற்ற நடிகர்களால் நஷ்டப்பட்டு கஷ்டத்தில் இருந்த எத்தனையோ தயாரிப்பாளர்கள் கேட்காமலேயே உதவியை வழங்கியுள்ளார் ரஜினி.
வெளியில் இருந்தவர்களுக்கே இப்படியென்றால், தன்னையே நம்பி உடனிருப்பவர்களை சும்மா விட்டுவிடுவாரா ரஜினி?
ரஜினியிடம் மேனேஜராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் கிருஷ்ணாராவ். 1978 முதல் 2001 வரை ரஜினியிடம் தொடர்ந்து பணியாற்றியவர் இவர். இப்போது அவருக்கு வயது 70. வயது மூப்பின் காரணமாக அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார் ரஜினி.
ஒரு அரசுப் பணியாளரை விட கவுரவமான வகையில் அவருக்கு பணி ஓய்வு கொடுத்துள்ளார் ரஜினி. 25 ஆண்டுகள் கிருஷ்ணாராவுக்கு எத்தனையோ உதவிகள் செய்த ரஜினி, கிருஷ்ணாராவ் ஓய்வுக்கு முன்னர் மிகப்பெரிய கவுரவமளித்துள்ளார்.
என்ன அது?
தனது படையப்பா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவே அவரை உயர்த்திய ரஜினி, அந்தப் படத்தில் லாபத்திலிருந்து பெரும் தொகையை கிருஷ்ணாராவுக்கு அளித்துள்ளார். இன்று சென்னையில் சொந்த வீடு உள்பட ரூ.6 கோடி சொத்துக்கு அதிபதி கிருஷ்ணாராவ்.
இப்போது அந்த சொத்துக்கள்தான் அவருக்கு வினையாக வந்துள்ளது. அவரது சொத்துக்களை அபகரிக்க சொந்தங்களே சதி வலை பின்ன, இப்போது போலீசின் உதவியை நாடியுள்ளார் கிருஷ்ணாராவ்.
தியாகராய நகர் போலீசாரிடம் நேற்று அவர் இதுகுறித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 1978 முதல் 2001 வரை மானேஜராக பணி செய்தேன். ரஜினிகாந்த் கடந்த 24 ஆண்டுகளாக எனது குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளார். ‘படையப்பா’ படத்தில் தயாரிப்பாளராக ஆக்கி என்னை அவர் கவுரவபடுத்தினார். எனக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துக்கள் உள்ளன.
எனது சொத்துக்களை அபகரிக்க என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எனது சொத்துக்களை அபகரிக்க கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். எனது சொந்த வீட்டில் வாழ முடியாமல், விடுதி ஒன்றில் தங்கியுள்ளேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என் குடும்பத்தினர் தான் பொறுப்பு.
என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளித்து, என்னை கொலை செய்ய துடிக்கும் எனது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிட்டுளளார் கிருஷ்ணாராவ்.
போலீசார் இப்போது கிருஷ்ணாராவின் உறவினர்களிடம் விசாரணைய மேற்கொண்டுள்ளனர்.

1 comment: