Saturday, March 21, 2009

'தவற' வைத்த தர்பூசணி




தர்பூசனிகுள் மனித உருவம்

மானிட

மனித உருவத்தினுள்

இரக்கம் இருக்க வேண்டும் . . .


நானும் எனது நண்பரும் ஆபீஸ்லிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தோம், எங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் சென்று கொண்டு இருந்தது அந்த வண்டியின் பின் புறம் அமர்ந்து இருந்த பெண் தர்பூசணி பலத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தார், சாப்பிட்டு முடித்த பின் பலத்தின் மேல் பகுதியை நடு ரோட்டிலேயே போட்டு விட்டார் இதை கவனிக்காத நண்பர் அதன் மேல் ஏற்றி விட்டார் . அப்போது சிறு பள்ளம் ஓன்று வர சடன் பிரேக் போட்டார்.பழம் சறுக்கி வண்டி கீழே சரியும் நிலை போய்விட்டது. நல்ல வேளையாக சுதாரித்து கீழே விழாமல் தப்பித்தோம் .
இதில் மேலும் வருத்தமான விஷயம் என்னவென்றால் ,நாங்கள் வண்டியில் இருந்து தடுமாறி விழஇருந்ததற்கு காரணமான அந்த பெண் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை அவர் சிரித்த படி பார்த்து கொண்டே போனது தான் மனதை வலிக்கவைத்தது நம்மால் தானே இப்படி ஆக பார்த்தது என்ற குற்ற உணர்வு முகத்தில் துளியலவாது வெளிப்பட வேண்டுமே ....ஊஹீம் .
வாழை பழம் , தர்பூசணி போன்றவற்றை பயணத்தின் போது சாப்பிடுபவர்கள் அவற்றின் தோலை ஓரமாக போட ஒருபோதும் மறக்காதிர்கள்
.

No comments:

Post a Comment