Tuesday, July 14, 2009

உதிரபோக்கிலிருந்து ஸ்டெம் செல்களை தயாரிக்கலாம்ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில மாற்றங்களை சந்திக்கிறார்கள் .மன அழுத்தத்தால் அவதி படுகிறார்கள் . "இனிமே மனம் அழுத்தன்கிற பேச்சிக்கே இடமில்லை.


மாதவிடாய் நாட்களை சந்தோசமாக பெண்கள் எதிர்கொள்கிற காலம் வந்துடிச்சு.ஆமா இது பெண்களுக்கு மட்டும்மில்லை ,பலருக்கும் நன்மை தர போகுது" என்கிறார் லைப்செல் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான மயூர். இந்த நிறுவனம் ஸ்டெம் செல்களை சேகரித்து அதன்மூலம் பல மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறது "ஸ்டெம் செல்கல்னா பலருக்கு புரியறது இல்லை.


இது கடைல கிடைக்கிற சாதாரன மருந்து பொருள்கள் இல்லை .ஆனா , ஒருத்தரோட உடம்புல ஏற்படுற குறைபாட்டை நிச்சயமா போக்க ஸ்டெம் செல்கள் உதவும் . உதாரணத்துக்கு ரத்தம் சம்மந்தமான பிரச்சனை உடம்புல ஏற்படுதுன்னு வச்சுகோங்க .அதை ஸ்டெம் செல்கள் மூலமா குனபடுத்த முடியும் .இந்த செல்களை குறிப்பா குழந்தைகளோட தொப்புள் கொடியில் இருந்து எடுக்கிறார்கள் .

ஆனா ,இப்படி எடுக்கிற ஸ்டெம் செல்களை அந்த குழந்தைக்கோ அல்லது அந்த குழந்தையோட நெருங்கின உறவினர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.பாதிக்க பட்ட செல்களை எடுத்துட்டு அந்த இடத்தில் ஸ்டெம் செல்களை வைக்கிறப்ப பல தரப்பட்ட செல்களை உருவாக்க முடியும் . இதன்மூலமா உடல் குறைப்பாட்டை சரி செய்யமுடியும்.இப்படி குழந்தைகளோட தொப்புள் கொடியில் மட்டுமில்லை , மாதவிடாய் காலத்துல பெண்களுக்கு ஏற்படுகிற உதிரபோக்கிளிருந்தும் ஸ்டெம் செல்களை உருவாக்கமுடியும்னு கண்டு புடிச்சிருக்காங்க .

இந்த ஸ்டெம் செல்கள் உடல்ல ஏற்படுற டிஸ்யு பிரச்சனைகளை தீர்க்கும் .அதாவது எலும்பு சம்மந்தமான பிரச்சனை ,இதய தசை எலும்பு ,நரம்பு மண்டலம் ,உடம்புக்கு தேவையான அடிபோஸ் என்கிற கொழுப்பு செல்கள் பாதிப்பு . . . இதையெல்லாம் ஸ்டெம் செல்கள் மூலியமா குணம் படுத்த முடியும் .இதய பிரச்சனை ,பக்கவாதம் ஆஸ்டியோபோரோசிஸ் ,ஆல்சைமர் போன்ற பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க என்கிறார் மயூர்

Sunday, June 14, 2009

இருதய நோயை தடுக்கும் தக்காளி


உலக அளவில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலிடம் வகிக்கிறது இருதய நோய் .அவசரம் ,நெருக்கடி நிறைந்த வாழ்க்கை முறை ,தேவையான சத்துக்கள் இல்லாத துரிதவகை உணவுகள் ,மாறி வரும் தட்ப வெப்ப மற்றும் சுற்று புற சூழல் போன்றவை காரணமாக இருதய நோய் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
இருதய நோய்களை தடுக்கவும் ,ரத்தத்தில் சேரும் கொழுப்பு இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன .இந்த மருந்துகளில் பல முழுமையான பலனை அளிப்பதில்லை .
நோய் வரும் முன் தடுக்கும் வகையில் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள் .
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ச் பல்கலை கழகம் மற்றும் பிரிட்டிஷ் இருதய அமைப்பு சேர்ந்து புதிய மருந்து குறித்த ஆய்வுகளை மேற்க்கொண்டது .குறிப்பாக தக்காளியில் இருந்து இருதய நோய்க்கு மாத்திரை தயாரிக்கும் முயற்ச்சிகள் நடைபெற்றன .
உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் பழ வகையில் தக்களிக்கு முக்கிய இடம் உண்டு .தக்காளியில் 'லைகோபின்என்ற சத்துப்பொருள் உள்ளது .தக்காளி பலத்தின் தோலின் உள்ள இந்த சத்துப்பொருள் நோய் எதிர்ப்பு மருத்துவ குணம் கொண்டது . ரத்தக்குழாயில் கொழுப்பு சேருவதை இந்த லைகோபின் தடுக்கிறது .
இது தவிர ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் ,அதையும் கரைக்கும் குணம் இந்த லைகொபின்க்கு உள்ளது . மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் இது குறைக்கிறது .
லைகோபின் நிரந்த மாத்திரையை தக்காளியில் இருந்தே தயாரித்துள்ளனர் .இந்த மாத்திரையை இருதய நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்த போது நல்ல பலன்கள் கிடைத்தது .
தற்போது இந்த தக்காளி மாத்திரை தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் நடை பெற்று வருகிறது .விரைவில் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு கிடைக்கும் .

Monday, March 30, 2009

சூரிய குளியல்('சன் பாத்') நல்லதா?

வெளிநாட்டினர் உள்ளாடை அணிந்து கொண்டு கடற்கரையில் சூரிய குளியல் (சன் பாத் ) செய்கிறார்களே ...அதில் ஏதாவது பயன் உண்டா என்றால் இருக்கு .
பயன் இல்லாமலா முழு உடம்பையும் காட்டிக்கொண்டு கடற்க்கரை மணலில் குப்புற படுத்துக்கிடக்கிறார்கள்? நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான 'வைட்டமின்கள்' நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது .ஆனால் வைட்டமின் 'D'மட்டும் சூரிய ஒளியிலிர்ந்துகிடைக்கிறது.இந்த வைட்டமின் 'D'சூரியன் உதித்த இரண்டு மணிநேரத்திற்கு பின் ,சூரிய ஒளியில் உற்பத்தியாகிறது .சூரிய ஒளிநம் உடம்பின் மீது படும்போது தோலில் உள்ள 'ஏர் கோஸ்டி ரோல்ஸ் 'எனப்படும் வேதி பொருள் சூரியனுக்கும் நமக்கும் இடையே ஒரு தரகர் போல் செயல்ப்பட்டு சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் 'D' யை பெற்று தருகிறது .இந்த வைட்டமின் 'D'உடலுக்கு தேவையான அளவுதான் இருக்க வேண்டும் .அதிகமானால் உடம்பின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு ,பக்க விளைவுகள் உண்டாகும் .நம் தாய்மார்கள் நல்ல வெயில் அடிக்கும் நேரத்தில் மொட்டை மாடியில் வற்றல் ,வடாம் உலர்த்துவார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் வற்றல் ,வடாம்களில் சூரிய ஒளி பட்டு அதில் வைட்டமின்கள் 'D'பொதிந்து விடும் .உணவில் மூலமாகவும் வைட்டமின் 'D' கிடைக்க நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடுகளில் இதுவும் ஓன்று .கெட்டுப்போன ஊருக்காயை ஒரு மணி நேரம் வெயிலில் வைத்துவிடுங்கள் .வைட்டமின் 'D' அதை சுத்திகரிப்பு செய்து ஊருக்காயிக்கு புது வாழ்க்கை கொடுக்கும் .வீட்டுக்குள்ளேயும் அலுவலகத்திலும் அடைந்து இருப்பவர்கள் கொஞ்சம் சூரிய ஒளி படுமாறு நேரத்தை செலவிடுங்கள் .

Sunday, March 29, 2009

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்


ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
..... ஸ்பெஷல் ரிப்போர்ட்

ரஜினியின் அரசியல் நிலைப் பாடு என்ன? அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது தொடர்ந்து சினிமாதானா ...இதுதான் தற்போது தமிகத்தின் காஸட்லி கேள்வி.
இந்த கேள்வி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவசியமன ஒன்றாகிவிட்டது. ஒரே கேள்வியை பல கோணங்களில் அவரிடம் மீடியாக்களும் பல பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
1985ல் இருந்தே ரஜினியை நோக்கி இந்த கேள்வி கிளம்பிவிட்டது. இதற்கு 1992 முதல் ரஜினி பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
‘’நான் அரசியலில் நுழையப்போவதாகவும்... அப்படி இப்படின்னு பரபரப்பாக பேசிக்கிட்டு இருக்காங்க. எழுதிக்கிட்டு இருக்காங்க. கமல் இருக்கிறார். இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னை மட்டும் ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனா, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். அரசியல் என்பது புலி வால் புடிச்சது மாதிரி. அதை விடவும் முடியாது. விட்டால் கடிச்சு குதறிவிடும்.’’ இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த ஒரு பாராட்டுக்கூட்டத்தில் 1992ல் ரஜினி பேசியது.
பாட்சா படத்தின் நூறாவது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேச அப்போது முதல்வராக இருநத ஜெயலலிதா சீறி எழுந்தார். இதற்கு முன்பு ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவுக்காக நிறுத்தப்பட்ட டிராபிக்கில் ரொம்ப நேரம் காத்திருக்க விரும்பாத ரஜினி காரிலிருந்து இறங்கி தமது வீடடுக்கு நடந்து போனதால் எழுந்த சர்சையும் ஜெயலலிதாவின் கோபத்தை கிளறிவிடிருந்த நேரம் அது.
பிலிம் சிட்டிக்கு பெயர் வைப்பது குறித்து ரஜினி சொன்ன கமெண்ட் மேலும் அன்றைய முதல்வர் ஜெவை கோபம் கொள்ள வைத்தது. தொடர்ந்து அவரை சீண்டுவதாக ஜெவின் கட்சியினர் கருதினர். இதனால் ரஜினி மீதான விமர்சன தாக்குதல்கள் கடுமையாக எழுந்தன.
ஜெயலலிதா அரசாங்கம் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று எழுத்தாளர் சுஜாதா கேட்டபோது(1994), ‘’நல்லா ஆட்சி பண்றாங்க. ரொம்பத் திறமையான் லேடி. நல்ல நால்ட்ஜ் இருக்கு. எனக்கு உறுத்தற விசயம் இந்த கட் அவுட் பப்ளிசிட்டி இதெல்லாம்தான். இவ்வளவு இண்டெல்லிஜெண்ட்டான லேடிக்கு இது ஏன் புரியமாட்டேக்குது.ஆனா செய்யறதை சைலண்ட்டா அமைதியா செய்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். என்றார். அதே நேர்காணலில் ரஜினியின் அரசியல் பற்றி கேட்டார் சுஜாதா.
‘’அவுங்க எல்லாருக்குமே (ரசிகர்களுக்கு) நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற கேள்வி இருக்கு. இதற்கு தெளிவான பதிலை ஏன் சொல்லமாட்டேங்கிறேன்னு நினைக்கிறாங்க. நான் தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமல்ல. இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன் என்றால் நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலேயும் சொல்லமுடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யார்? வில்லன் யார்? என்று யாருமே சொல்லமுடியாது.’’என்றார்.
அவரது அரசியல் ஈடுபாடு குறித்து கேட்கப்பட்டபோது, ‘’கொஞ்சம் கூட இல்லை. எதுக்காக அரசியல் வேணும். பணம், புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யனும்....இதுதானே. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு இது எல்லாமே கிடைச்சிருக்கு. அரசியல் நிலைமையில் யாருக்கும் நல்லது செய்யமுடியாது. இது எனக்கு தெரியும்.’’என்றார்.
அரசியலுக்கு வந்தால் உங்கள் கைக்கு சக்தி வாய்ந்த பதவி வரும் இல்லையா? என்று கேட்டபோது, ‘’தனிமனிதனால எதுவும் சாதிக்கவே முடியாது. எல்லாமே மாறனும். ஒட்டு மொத்த அமைப்பே மாறனும். புது வெள்ளம்னு சொல்றாங்க இல்லையா..அது மாதிரி..அரசியல் அமைப்பே மாறனும். இப்ப இருக்குற சிஸ்டம்ல யாரலேயும் ஒன்னும் பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு. எம்ஜியாரை எடுத்துக்குங்க . வந்த முதல் இரண்டு வருடம் எப்படியிருந்தார். அதுக்கப்புறம் அவராலேயே ஒன்னும் செய்யமுடியவில்லையே.’’’ என்றார் ரஜினி.
முத்து படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் சில, ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தன. இதனால் ஜெவின் எதிர்ப்பும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களின் எதிர் தாக்குதலும் ரஜினியை நோக்கி திரும்பின. அதே நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது அவசியம் என்ற சூழல் ஏற்பட்டது. 1996ல் மக்களும் ரஜினிக்கு ஆதரவு தர தயாராக இருந்த நிலையில் எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினி அப்போது அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயித்திருக்கலாம். அப்போது அவர் வாய்ஸ் மட்டும் கொடுத்தார். அவர் வாய்ஸ் கொடுத்த திமுக கூட்டணி கட்சி ஜெயித்தது.
அடுத்த தேர்தலில் ஜெ ஆட்சிக்கு வந்தார். மறுபடியும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்தன. ’’ ரஜினி தனது படங்கள் வரும்போது எல்லாம் அரசியல் பேசுவார். அதுவரை அவர் பேச மாட்டார். இது அவருடைய வியாபார உக்தி.’’ என்கிறார் பத்திரிக்கையாளர் ஞானி.
சமீபகாலத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்ற சர்ச்சை பெரிதாக எழுந்திருப்பதற்கு காரணம், அவருக்கு பிறகு சினிமாவுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார், ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி எல்லாம் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்கள்.
அவர்களைவிட புகழ்பெற்ற நடிகரான ரஜினி ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இத்தனை யோசிக்கிறார் என்றுதான் அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சிதான் சமீபத்தில் ரஜினி ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கையும் என்னை யாரும் நிர்பந்திக்க கூடாது என்ற அறிக்கையும். ரஜினி எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அவரை பொறுத்தவரை எல்லாம் சரியாக நடக்கவேண்டும்.
இல்லை என்றால் கோபம் வந்துவிடும். தனது அரசியல் பிரவேசத்தால் படங்களின் வியாபாரம் பாதிக்கும், சொந்த வாழ்வில் நிம்மதியில்லாமல் போகும் என்று யோசித்துதான் அவர் அரசியலை வாய்ஸ் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்.
அது சரி, ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற கேள்வியை மறுபடியும் எழுப்புகிறவர்களுக்கு ரஜினியை ஓரளவுக்கு புரிந்து கொண்ட, ரஜினியுடன் பல தடவை நேரில் சந்தித்து பழகியிருக்கும் நக்கீரன் கோபால் சொன்னதுதான் நிஜமோ என்று நினைக்கத்தோன்றுகிறது
1999ல் இந்தியா டுடேவில் நக்கீரன்கோபால் சொன்னது : ‘’ரஜினிக்கு சொந்த அரசியல் அபிலாசைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தான் ஆட்சிக்கு வரனும். தனக்கு பதவி அதிகாரம் வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருப்பதாக நான் நினைகவில்லை. ஆனால் அவர் நேரடி அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு லாபம்னு நினைக்கறவங்க பலர் அவர் அரசியலுக்கு வரனும்னு விரும்பராங்க. மீடியாவும் அந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணுது’’.

நன்றி!நக்கீரன் நாளிதழ்

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார்.
இந்த 34 குழந்தைகளுக்கும் படிப்பு செலவு, சாப்பாடு, துணிமணிகள் என அனைத்து செலவுகளையும் ஏற்று இருக்கிறார்.
இது பற்றி பிரீத்தி ஜிந்தா,
’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.
அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன்.
தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.
அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள்.
பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும்.
நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.
நிழல்கள் நிஜமானால் நன்மையே
நன்றி நக்கீரன் நாளிதழ்

மனிதகுரங்கு

'சிம்பன்சி' என்ற மனிதகுரங்கின் நடவடிக்கைகளை பார்த்தால் ஒரு மனிதனை போலவே இருப்பதற்கு என்ன காரணம் ?

'சிம்பன்சிகுரங்கு 99 சதவீதம் மனிதன் . மனிதனின் மரபணுக்களையும் (DNA) ஒரு சிம்பன்சியின் மரபணுக்களையும் ஒப்பிட்டு பார்த்த உயிரியியல் சைண்டிஸ்ட் அசந்து போனார்கள் .காரணம் இரு மரபணுக்களும் 99 சதவீதம் ஒரேமாதிரியாய் இருந்தது தான்! மனிதனையும் ,மனிதகுரங்கையும் வேறுப்படுத்தி காட்டுகிற மீதி ஒரு சதவீதம் எது என்பதை கிளறி பார்க்க ஆரம்பித்தார்கள் .அதற்காக ஒரு சோதனை குழாயில் மனிதனின் மரபணுக்களையும்,மனிதகுரங்கின் மரபணுக்களையும் ஓன்று சேர்த்து ஒரு உயிரை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் .வெற்றிகிடைப்பது போல் தோன்றி பிறகு அது தோல்வியில் முடிந்தது .
தோல்விக்கு காரணம் அந்த ஒரு சதவீத வித்தியாசம் தான் .இந்த வித்தியாசமே நம்மையும் மனிதகுரங்கையும் பெரிய இடைவெளியில் பிரித்து வைத்து இருக்கிறது .குரங்கு குரங்கு தான் ! மனிதன் மனிதன் தான் ....! காரணம் ,மனித குரங்கின் மரபணுக்கள் மொத்தமும் 48 குரோமோசோம்களில் அடங்குகின்றன. ஆனால் மனிதனின் மரபணுக்கள் 46 குரோமோசோம்களில் அடங்கிவிடுகின்றன .
நல்ல வேலை ....தப்பித்தோம் என்றீர்களா ?
நன்றி ராணி வார இதழ் .

பெண்களே :தள்ளிபோடதீர்கள்

மாதவிலக்கு : தள்ளிபோடாதீர்கள்!
பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்ப்படுவது குறிப்பிட்ட வயது வரை தவிர்க்க முடியாது .பெண்களின் உடல்வாகை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதவிலக்கு காலம் மாறுபடலாம் .
ஆனால் ,சில பெண்கள் மாதவிலக்கு முறையாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள் . இதே போல் சில பெண்கள் கோவிலுக்கு போக வேண்டும் என்பதற்க்காகமாதவிலக்கை தள்ளி போடும் மாத்திரைகள் சாப்பிட்டு பழகிவிடுகிறார்கள் .இன்னும் சில பெண்கள் தேர்வு நேரங்களிலும் ,வெளியிடங்களுக்கு செல்வதற்காக மாதவிலக்கை தள்ளிபோட மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் .
இப்படி அடிக்கடி மாத்திரையை போட்டு அதையே தங்களுக்கு வழக்கமாகவும் ,பழக்க மாகவும் ஆக்குகிறார்கள் .இது நாளடைவில் கருப்பை பாதிப்பை உண்டாக்கும் .அதிக ரத்தபோக்கு ,மாதவிலக்கு சீராக வராமல் போவது போன்றவற்றை ஏற்படுத்தும் .
எனவே கூடுமானவரை மாதவிலக்கை தள்ளிபோடும் மாத்திரைகளை தொடர்ந்து போடுவதை பெண்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது .
நன்றி! ராணி வார இதழ் .

விருதா,உறவா. . . ?


" சுதந்திர போராட்ட வேங்கை பகத் சிங்கின் அண்ணன் ரன்பீர் சிங். இவருடைய மகன் யோனான் சிங்,ராணுவத்தில் இருக்கிறார் .இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது ,அதில் முக்கிய வீரராக இருந்தார் .இவருக்கு மத்திய அரசு 'வீர' விருது அறிவித்தது .மகிழ்ச்சியுடன் அப்பாவிடம் சொன்னார் .ஆனால் அப்பா முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

"இலங்கையில் தமிழ் இனம் உரிமை கோரி போராடுகிறது .நீ தெரிந்தோ தெரியாமலோ அமைதிப்படைக்கு ஒத்துளைத்துல்லாய் .இது மிக பெரியதவறு .இன விடுதலையை அடக்குவதற்காக தரப்படும் விருதை நீ வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை ,அப்படியே நீ விருது பெறுவதாக இருந்தால் ,நமக்குள் இனிமேல் எந்த உறவும் இருக்காது .விருதா உறவா ? என்பதை முடிவு செய்துகொள் "என்று ரன்பீர் சிங் கொந்தளித்து முடித்தார்.

யோனானுக்கு மனசு உறுத்தியது .மத்திய அரசின் விருதை மறுயோசனை இன்றி புறக்கணித்து விட்டார் .

Thursday, March 26, 2009

'அந்த நேரத்து' ரகசியங்கள்!


ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவன்மாரிடம் சிலவற்றை விரும்புகின்றனர். இருவரும் தனித்திருக்கும் அந்தரகமான அந்த நேரத்திலும் 'அந்த மாதிரியான' ஆறு ரகசியங்களை பாலியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . ஆண்கள் அவற்றை அறிந்து கொண்டால் கை மேல் பலன் கிடைக்கும் .

அன்பான உர்ரையாடல்கள்:
அன்பான் உரையாடல் எந்த பெண்ணையும் நெகிழ்த்திவிடும் .பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு செக்ஸ் விட அனுசரணையான பேச்சும் அன்பாக உணர்வதும் முக்கியம் . குறிப்பாக தினசரி நெருக்கடியான பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு இம்மாதிரியான அனுசரனய்யான வார்த்தைகள் மகிழ்ச்சி தருகின்றன .கணவருடன் ரிலாக்சான நிலையில் மனம் விட்டு பேசுவது அவசியம் மனைவிக்கு மிகவும் இதமாக இருக்கும்.அந்த நேரத்தில் கணவன்மனைவி மகிழ்வுமாறு பேசுவது அவசியம் .மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள் ,தான் எந்தளவு நேசிக்கிறேன் என்று அவளின் காதுக்குள் கிசுகிசுப்பது கிளர்ச்சி உட்டும்

அழகை போற்றுவது :
'நான் நிறைய 'வெயிட்' போட்டுட்டேன்...என்னோட அழகை அவர் கண்டுக்காத போது நான் எப்படி இருந்தா என்ன?'என்று அலுத்துக்கொள்ளும் பெண்கள் அநேகம் .ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும் . ஆனால் எல்லா மனைவியருமே தங்கள் கணவன் தங்கள் அழகை புகழவேண்டும் எதிர்பார்க்கிறார்கள் .அதற்காக மனைவியை 'நீ தேவதை மாதிரி இருக்கே ' என்று 'ஓவராக' புகல வேண்டியதில்லை . 'அழகுக்கும்
உனக்கும் என்ன சம்மந்தம் என்று போட்டு தாக்கவும் கூடாது .மனைவியின் அழகான அம்சத்தை குறிப்பிட்டு பாராட்டலாம் .'உன்னோட கண்ணழகு யாருக்கு வரும் ?, "உன்னோட உதட்டலகுக்கு முன்னால ஏன்சளினா கூட பின்வாங்கனும்' என்று கூறலாம் .
படுக்கையறைக்கு வெளியிலும் ....
பெண்கள் இதயபூர்வமாக செயல்படுபவர்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்வில் ஒவ்வொரு விசயமும் ஒன்றையொன்று சார்ந்தவைதான் .படுக்கையறையில் திருப்தியான 'உறவு' க்கு பெண்கள் நல்ல மனநிலையில் இருப்பது அவசியம் .நாள் முழுவதும் நல்ல விதமாக ஒவ்வொருவரு ஒவ்வொரு .முறையும் ஒவ்வொரு ஒவ்வொரு இருப்பது ,ஒவ்வொரு வார்த்தைகளை உபயோகிப்பது ,மோசமாக விமர்சிப்பது போன்றவை படுக்கையறையில் எதிரொலிக்கும். திடீரென்று ஒருநாள் அலுவலகத்திளிர்ந்து சீக்கிரமாக வீட்டுக்கு வருவது ,குறிப்பிட்ட காரணம் என்றில்லாமல் 'சர்பிரைஸ்பரிசு ' கொடுப்பது மனைவியை குசிப்படுத்தும் .இன்னும் அதிகமாக இணக்கம் காட்ட வைக்கும்.

உச்சக்கட்டம் :ஒவ்வொரு முறையும் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதுதான் திறமையான கணவனுக்கு அடையாளம் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள் .அது அமைந்தால் நல்லது தான் .ஆனால் எப்போதும் அவசியமில்லை ,உறவில் பாதிக்கு மேற்பட்ட தடவைகள் அறுபது
சதவீதம் பெண்களே உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .அதை எட்டுவதற்காக துணையால் ,அல்லது தளங்களுக்கு தாங்களே நிர்பந்திப்பது தான் பல நேரங்களில் நடக்கிறது .உச்சக்கட்டத்திலேயே குறியாக இருப்பது ,வழியில் காணும் அழகிய காட்ச்சிகளை ரசிக்காமலே அடைய வேண்டிய இடத்தை பற்றிய கவனத்துடன் உல்லாச பயணம் செல்வது போல .
விளையாட்டு :
அனேக ஆண்கள் செக்ஸ்ன் போது சிரியசாகவே இருக்கின்றனர் .சிரிப்பதில்லை ,சிறு சிறு எல்லை மீறல்கள் ,விளையாட்டு சீண்டல்களில் ஈடுபடுவதில்லை .'விளையாட்டு தனம் 'தனிமை நேரத்தை இனிமைபடுத்தும் .'நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையை யும் இருவரிடமிருந்தும் அகற்றும்.
'சைவமான 'தொடுகை :
பெண்களுக்கு 'ரொமான்ஸ்' பிடித்தமான விஷயம் .கணவன்மார்கள் செக்ஸ் 'அதற்க்கு முந்தய விளையாட்டுகளின் போது தவிர மாற்ற நேரங்களில் தங்களை தொடுவதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார் .ஒரு திடீர் அணைப்பு ,திடீர் முத்தம் பெண்களை மலர்த்தும் .'அசைவம்' அல்லாத தொடுகையில் கூட அவர்கள் சந்தோசம் உணர்வார்கள் .

இந்த பதிப்பை குடும்ப மலரில் படித்தேன் வெளியிட்டேன் நன்றி குடும்ப மலர் .Wednesday, March 25, 2009

'அருந்ததி' -விமர்சனம்

அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.அம்புலிமாமா, ரத்னபாலா கதைதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் நம்முடைய தொழில் நுட்ப அறிவை பறை சாற்றுகிறது.அருந்ததி.. கந்தர்வக்கோட்டை என்னும் குட்டி சமஸ்தானக் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு. அந்த சமஸ்தானத்தில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் அரசாண்ட அருந்ததியே, இப்போது பேத்தியாக பிறந்திருக்கிறாள். அவதார நோக்கம் அப்போது முடிக்காத கதையை இப்போது முடிப்பதற்காக..!சொந்த அக்கா கணவனான பசுபதியை அவன் செய்த அட்டூழியங்களுக்காக தண்டிக்கிறாள் அருந்ததி. ஊரைவிட்டே துரத்தியடிக்கிறாள். நார், நாராக பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் காட்டிற்குள் வீசப்படும் பசுபதி அங்கே நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளின் கண்களில் படுகிறான். அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.ஏழாண்டு காலத்திற்குப் பின் தனது மாமனாரின் அரண்மனைக்குள் நுழையும் பசுபதி அன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அருந்ததியின் திருமணத்தில் கொலை விளையாட்டு நடத்துகிறான். மாமனாரை படுகொலை செய்கிறான். அருந்ததியை தான் இப்போதே அடைய வேண்டும் என்கிறான். அவன் விருப்பப்படியே நடந்து கொள்ளும் அருந்ததி தந்திரமாக அவனைத் தாக்கி படுக்க வைக்கிறாள். அந்த நிலையிலேயே அவனைச் சுற்றிலும் கல்சுவர் எழுப்பி உயிரோடு சமாதியாக்கிவிடுகிறாள்.அத்தோடு அந்த அரண்மனையை அனைவரும் தலை முழுகிவிட்டு போய்விட.. இப்போது பேத்தி அருந்ததி அந்த ஊருக்கு வரும்போதுதான் கதை துவங்குகிறது. அவளை பசுபதியே வரவழைக்கிறான். அவள் வந்த பின்பு அவளையும், அவள் குடும்பத்தையும் அழிப்பேன் என்று சபதமெடுத்த பசுபதி செய்து முடித்தானா? இல்லையா..? என்பதைத்தான் வழக்கமான வில்லன்-ஹீரோயின் கதை போல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.


திரைப்படத்துறையில் கிடைக்கும் அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் இதில் பயன்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல் பாராட்டு படத்தின் கலை இயக்குநருக்கு.. படத்தின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி இழையாடுகிறது.. அவ்வளவு அழகான செட் அந்த அரண்மனை.. பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்


அனுஷ்கா இரட்டை வேடங்களில், அம்மணி தன்னுடைய கேரியர் முழுவதிலும் நடிக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே முடித்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.. மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெக்கம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது.இடுப்பு சுழிக்கிக் கொள்ளுமளவுக்கு ஆட்டம் ஆடியிருந்த அம்மணியா இப்படி..? ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குநர்கள் மிகச் சரியானவராக அமைந்தால் திறமை நிச்சயம் வெளிப்படும் என்பார்கள். இதில் கோடிராமகிருஷ்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன். அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும். முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம்.


நமது இயக்குநர்கள் இவர் போன்ற இளமை ததும்பும் நடிகையரிடம் வைக்கத் தயங்கும் குளோஸப் காட்சிகள்தான் இந்தப் படத்தில் அதிகம். கோபத்தின் மூச்சுக் காற்றில் அனுஷ்காவின் மூக்குத்தி நகர்வதைக்கூட துல்லியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!மேக்கப்பே இல்லாமல் காட்சியளிக்கும் பேத்தி அருந்ததியின் நடிப்பைவிட இறுதியில் பாட்டி அருந்ததியே வெறி பிடிக்க வைக்கிறார். இதற்கு மிகப் பெரும் உதவிகரம் ஒளிப்பதிவாளர்.. அரண்மனைக் காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதுமே மிக அழகாக இருக்கின்றன.. கிராபிக்ஸ் காட்சிகளும், மேக்கப்பும், இசையும்தான் படம் திகில் படம் என்பதை அவ்வப்போது காண்பித்துக் கொண்டேயிருக்கின்றன. வில்லனின் மோப்பம் பிடிக்கும் காட்சியை இரண்டு இடங்களில் பெண் கதாபாத்திரங்கள் மூலமாகச் செய்யும்போது அதிர்கிறது பின்னணி இசை.. அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டெக்னிக்கல் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.. ஆக்ஷன் படங்களில் டைம்லேப் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பார்கள். இதில் கச்சிதமாகவே உள்ளது.பேயோட்டுபவராக வரும் சாயாஜி ஷிண்டேவுக்கு மிகப் பொருத்தமான வேடம்தான்.. பொதுவாகவே தெலுங்குக்காரர்களுக்கு வில்லன்கள் என்றாலே கர்ஜனை குரல்தான் முக்கியம் என்பார்கள். சாயாஜி அறிமுகக் காட்சியில் இருக்கும் ஸ்பீட் பதைபதைக்க வைக்கிறது..


படத்தொகுப்பாளரின் கட்டிங் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரம்.. காட்சிகள் அடுத்தடுத்து அபரிமிதமான இசையமைப்புடனும், ஒளிப்பதிவுடனும் வந்திருக்க.. வில்லன் முகம் மறைத்து பின் வந்து பின் மறைத்து நிமிடத்தில் மாறுகின்றபோதெல்லாம் ஒரு நொடிகூட ஜெர்க் இல்லை.. நச்சென்று இருக்கிறது..


மனோரமாதான் பாட்டி அருந்ததியின் கதையை நமக்குச் சொல்பவர். மனுஷிக்கு எப்பவுமே கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். இந்தப் படத்தில் அதற்குத்தான் வேலை அதிகம்.
அடு்த்தது என்ன..? அடுத்தது என்ன..? என்று மிக ஆர்வத்துடன் நகத்தைக் கடிக்க வைத்துவி்ட்டார்கள். லாஜிக் பார்க்கவே முடியாத திரைப்படம் என்றாலும், திரைக்கதை அசுர வேகத்தில் செல்வதால் எதையும் யோசிக்கவே முடியவில்லை..


கல்சுவருக்குள் படுத்துக் கொண்டே அருந்ததியின் தாத்தாவை வழுக்கி விழுக வைக்கவும், அருந்ததியிடம் அவனது வருங்காலக் கணவன் குரலில் பேசவும் முடியும் வில்லன் பசுபதியால் அந்தச் சுவரை உடைக்க முடியவில்லை என்கிற லாஜிக் இப்போதுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் ஒரு சாஸ்திர சம்பிரதாயக் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சுவர் முழுவதும் மந்திரங்களை தட்டில் எழுதி பொருத்தி வைத்திருக்கிறார்கள். அவனால் தொட முடியாது என்று..! கோடிராமகிருஷ்ணா என்ன கொக்கா..? அம்மன் படம் பார்க்க வந்தவர்களை, தியேட்டரிலேயே அம்மனை வரவழைத்து ஆட வைத்தவராச்சே..


பாடல்களில் முதல் பாடல்தான் ஏதோ புரிந்தது.. தமிழுக்கேற்றாற்போல் வாலி எழுதியிருக்கிறார். பசுபதியின் மிரட்டலின்போது பாட்டி அருந்ததி போடும் பாடல் 'காதல் ஓவியம்' படத்தின் 'சங்கீத ஜாதிமுல்லை..' பாடலின் சாயலை ஒத்திருந்தது.. பின்னணி இசை அமர்க்களம்.. அவ்வப்போது பசுபதியும், அருந்ததியும் அவரவர் குரல்களில் பேயாட்டம் ஆடும்போது ஒத்து ஊதுவதை நன்றாகச் செய்துள்ளது இசை.பசுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் சுபாஷினியின் அழகான கண்களில் கருவிழிகள் மட்டும் நட்ட நடுவில் உருள்வது பார்க்க பயங்கரமாக உள்ளது. சரியானப் பொருத்தம். மாயாஜாலம், மேஜிக், மந்திரம், தந்திரம் என்ற அலப்பறையோடு நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்திவிட்டதால் படத்தின் ஓப்பனிங் அபாரம் என்கிறார்கள். படத்தின் நிலை தெரியாமல் பலரும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்தவர்களை அனுப்ப முடியவில்லை.அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது. இது போன்ற திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரவேகூடாது. கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன. ஆனால் படத்தின் உயிரோட்டமான இடங்கள் இவைகள் என்பதால் மறுக்க முடியவில்லை..இத்திரைப்படம் தெலுங்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.. ஜெயிக்காமல் போனால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்..திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள். அதற்கு மிகச் சிறப்பான உதாரணமாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!

Tuesday, March 24, 2009

கோபம்

கோபம் ஏன் வருகிறது என்று யாரிடமாவது கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து பதில் வருவது தெரியவில்லை சரி அதற்க்காக சிறிய கதை படித்ததை எழுதுகிறேன்.

கதை : ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தம்பதியர்க்கு ஒரு ஆண் பிள்ளை இருந்தான் , அவனுக்கோ அளவுக்கு அதிகமாக கோபம் ஆட்கொண்டது . அடிக்கடி கோபம் வரும் போதுகையில் எதுகிடைத்தாலும் உடைத்து விடுவான் பள்ளியிலும் சரி நண்பர்களோடு எப்பபாத்தாலும் சண்டை வீட்டிலும் அம்மா அப்பா இரண்டு பேரிடமும் கோபம் கொண்டான். அந்த கிராமத்தில் எல்லோரிடமும் எல்லா தெருக்கலில் உள்ள தம்பதியர்களோடு பிள்ளை களோடு சண்டை போட்டதால் எல்லோரும் வீட்டுக்கு வந்து சண்டை போட்டனர் .அம்மாவால் வழக்காட முடியவில்லை எவ்வளவோ சிறுவனை அந்த தம்பதியினர் சமாதான படுத்தியும் முடியவில்லை.எவ்வளோவோ டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பார்த்தனர் பணம் செலவாகியதே தவிர சிறுவனுடைய கோபம் தணியவில்லை

அவனிடமே ஏன் இப்படி உனக்கு கோபம் வருகிறது என்று கேள்வி கேட்டால் என்னனு தெரியல திடிர்னு வருது என்றான் அவனுடைய அம்மாவால் ஒண்ணுமே பண்ண முடியல மகன் இப்படி இருக்கிறானே என்று ரொம்ப மன கஷ்டம் பட்டார் அம்மா , கடைசியில் ஒரு மகரிஷி இடம் அழைத்து சென்றனர் மகரிஷியிடம் அம்மா தன்னுடைய மகனுடைய குறைகளை சொல்லி கண்ணீர் வடித்தார் .

மகரிஷி சிறுவனை தனியாக அழைத்தார் சிறுவனிடம் மகரிஷி ஏன் உனக்கு கோபம் வருகிறது என்று கேட்டார் அதற்கு சிறுவனுடைய பதில் தெரியவில்லை என்பதாகவே இருந்தது கோபம் வருவதற்கான காரணம் உனக்கு தெரியவில்லை நான் கூறுகிறேன் என்றார் ஒருவன் பிறந்ததிலிருந்து வாழ்க்கை முடிவு வரை பலவிதமான ஆசைகள் அவனுடைய மனதில் தோன்றுகின்றன அதில் சில நிறைவேறுகின்றன பல நிறைவேறுவதில்லை ஆகையால் ஏமாற்றங்கள் தான் மிஞ்சுகின்றன வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அதிக்கரிக்க அதிகரிக்க மனதில் ஒரு பக்கம் சேகரிக்க பட்டு மனவளிமயினுடைய எல்லையை தாண்டும்போது கோபமாக வெளிபடுகின்றன .ஆகையால் ஆசைகளை குறைத்து வாழ்ந்தால் வாழ்க்கை மலரின் நர்மனம் போல் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் அமையும் என்று சிறுவனிடம் கூறினார் மகரிஷி.

சிறுவனின் நிறைவேறாத ஆசைகளை கேட்டார் மகரிஷி ,ஆசைகளை கூறினான் அதை ஒரு பேப்பரில் பட்டியலிட்டார் சிறுவனுடைய அம்மாவை அழைத்தார் அந்த அம்மாவிடம் உங்களுடைய மகனுடைய ஆசைகள் இந்த பேப்பரில்எழுதிஉள்ளேன்.அதை நிறைவேற்றுங்கள் உங்களுடைய மகன் குறைகள் சரியாயிடும் என்றார் மகரிஷி .சிறுவனுடைய தம்பதியினர் மகரிஷி சொன்னது போல் சிறுவனுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினர் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ஆகையால்ஆசைகளை குறைத்தால் வாழ்க்கை வசந்தமாக அமையும் .

Sunday, March 22, 2009

தெரியுமா ? பெண்களை பற்றி . . .

தெரியுமா ? பெண்களை பற்றி . . .

ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதை போல் இந்த செய்தியை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது...(நன்றி : தினத்தந்தி குடும்பமலர்)
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.
இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.
பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.
மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.
ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.
ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.
உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )

Saturday, March 21, 2009

'தவற' வைத்த தர்பூசணி
தர்பூசனிகுள் மனித உருவம்

மானிட

மனித உருவத்தினுள்

இரக்கம் இருக்க வேண்டும் . . .


நானும் எனது நண்பரும் ஆபீஸ்லிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தோம், எங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் சென்று கொண்டு இருந்தது அந்த வண்டியின் பின் புறம் அமர்ந்து இருந்த பெண் தர்பூசணி பலத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தார், சாப்பிட்டு முடித்த பின் பலத்தின் மேல் பகுதியை நடு ரோட்டிலேயே போட்டு விட்டார் இதை கவனிக்காத நண்பர் அதன் மேல் ஏற்றி விட்டார் . அப்போது சிறு பள்ளம் ஓன்று வர சடன் பிரேக் போட்டார்.பழம் சறுக்கி வண்டி கீழே சரியும் நிலை போய்விட்டது. நல்ல வேளையாக சுதாரித்து கீழே விழாமல் தப்பித்தோம் .
இதில் மேலும் வருத்தமான விஷயம் என்னவென்றால் ,நாங்கள் வண்டியில் இருந்து தடுமாறி விழஇருந்ததற்கு காரணமான அந்த பெண் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை அவர் சிரித்த படி பார்த்து கொண்டே போனது தான் மனதை வலிக்கவைத்தது நம்மால் தானே இப்படி ஆக பார்த்தது என்ற குற்ற உணர்வு முகத்தில் துளியலவாது வெளிப்பட வேண்டுமே ....ஊஹீம் .
வாழை பழம் , தர்பூசணி போன்றவற்றை பயணத்தின் போது சாப்பிடுபவர்கள் அவற்றின் தோலை ஓரமாக போட ஒருபோதும் மறக்காதிர்கள்
.

நட்ப்பாக நீ வேண்டும்

நட்ப்பாக நீ வேண்டும்
பார்த்து வியக்க்
ஒரு நட்பு . . .
குழந்தை பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு . . .
காளை பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு . . .
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு . . .
முதிர்ந்த பின்
அனுபவங்களை
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு . . .
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை . . .
தேவையின் போது
தோள்களில் சாயா
நட்பு வேண்டும் . . .
நானாக நானிருக்க
நட்பே . . .
நீ எனக்கு
நட்பாக வேண்டும் . . .

Thursday, March 19, 2009

கவித்தலைவன்

கவித்தலைவன்
கள்ளிக்காட்டில் கால்சட்டை
வயதில் ஐம்பெரும் காப்பியங்கள்
முடித்தவன் அவன்
வைகறை ஆற்றின் வடதிசையில்
மாடுகள் நுனி புல் மேயும் போது
தமிழின் அடி ஆழம் வரை
படித்தவன் என் கவித்தலைவன் அவன்

காதல் செய்தவளை சாதி மதம்
எதிர்த்து கைபிடித்தவன்
இன்னும்காதலிப்பவான்
அவளை மட்டும்
என் என் கவித்தலைவன் அவன்

வெள்ளை காகிதத்தில்
இவன்எழுதுகோல் தலை சாய்ந்த போதெல்லாம்
தமிழ் மொழி தலைநிமிரும்
என் கவித்தலைவன் அவன்
சமுத்திர அளவு கடக்க நினைத்து
ஒரு குடுவைக்குள் சிறைப்பட்டவன்
வானம் ஏறி
கவிதை சொல்ல புறப்பட்டவன்
ஒரு குளிர் அறையில் மட்டும்
பாடல் எழுதி வருபவன் என்
கவித்தலைவன் அவன்

தமிழ் மட்டும் அல்லாமல்
அறிவியல் , இலக்கியம் , பொதுஅறிவு ,
வேதாந்தம் , சித்தாந்தம் , மருத்துவம் ,
என அனைத்திலும் ஆணி வேர்வரை
கற்றவன்
என் கவித்தலைவன் அவன்

காதல் , கல்வி , வாழ்க்கை
அனைத்திலும் அவனை போல
வாழ ஆசை
காரணம் என்
தலைவன் அவன் !!!
வைரமுத்து !!!

தன் உதவியாளரையும் கோடீஸ்வரராக்கிய ரஜினி!

தன் உதவியாளரையும் கோடீஸ்வரராக்கிய ரஜினி!ரஜினி என்ற மனிதர் சொல்லி செய்ததைவிட சொல்லாமல் செய்த நன்மைகள் ஏராளம். திரைத்துறையில் ரஜினியின் உதவி பெற்ற அல்லது ஏதாவது ஒரு வகையில் ரஜினியால் வாழ்வு பெற்றவர்களே அதிகம்.
தன் எதிரிகளாகவே இருந்தாலும் தன்னை நம்பி வந்தால் வேறு யோசனையோ, அவர் முன்னர் செய்த தீமைகளையோ யோசித்துக் கொண்டிருக்காமல் உதவி செய்துள்ளார். அதையும் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்துள்ளார் ரஜினி. மன்சூர் அலிகானும், வேலு பிரபாகரனும் அவர்களாகவே முன்வந்து சொன்ன பிறகுதான் அவர்களுக்கு ரஜினி செய்த உதவிகளே வெளியில் தெரிய வந்தன.
மற்ற நடிகர்களால் நஷ்டப்பட்டு கஷ்டத்தில் இருந்த எத்தனையோ தயாரிப்பாளர்கள் கேட்காமலேயே உதவியை வழங்கியுள்ளார் ரஜினி.
வெளியில் இருந்தவர்களுக்கே இப்படியென்றால், தன்னையே நம்பி உடனிருப்பவர்களை சும்மா விட்டுவிடுவாரா ரஜினி?
ரஜினியிடம் மேனேஜராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் கிருஷ்ணாராவ். 1978 முதல் 2001 வரை ரஜினியிடம் தொடர்ந்து பணியாற்றியவர் இவர். இப்போது அவருக்கு வயது 70. வயது மூப்பின் காரணமாக அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார் ரஜினி.
ஒரு அரசுப் பணியாளரை விட கவுரவமான வகையில் அவருக்கு பணி ஓய்வு கொடுத்துள்ளார் ரஜினி. 25 ஆண்டுகள் கிருஷ்ணாராவுக்கு எத்தனையோ உதவிகள் செய்த ரஜினி, கிருஷ்ணாராவ் ஓய்வுக்கு முன்னர் மிகப்பெரிய கவுரவமளித்துள்ளார்.
என்ன அது?
தனது படையப்பா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவே அவரை உயர்த்திய ரஜினி, அந்தப் படத்தில் லாபத்திலிருந்து பெரும் தொகையை கிருஷ்ணாராவுக்கு அளித்துள்ளார். இன்று சென்னையில் சொந்த வீடு உள்பட ரூ.6 கோடி சொத்துக்கு அதிபதி கிருஷ்ணாராவ்.
இப்போது அந்த சொத்துக்கள்தான் அவருக்கு வினையாக வந்துள்ளது. அவரது சொத்துக்களை அபகரிக்க சொந்தங்களே சதி வலை பின்ன, இப்போது போலீசின் உதவியை நாடியுள்ளார் கிருஷ்ணாராவ்.
தியாகராய நகர் போலீசாரிடம் நேற்று அவர் இதுகுறித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 1978 முதல் 2001 வரை மானேஜராக பணி செய்தேன். ரஜினிகாந்த் கடந்த 24 ஆண்டுகளாக எனது குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளார். ‘படையப்பா’ படத்தில் தயாரிப்பாளராக ஆக்கி என்னை அவர் கவுரவபடுத்தினார். எனக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துக்கள் உள்ளன.
எனது சொத்துக்களை அபகரிக்க என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எனது சொத்துக்களை அபகரிக்க கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். எனது சொந்த வீட்டில் வாழ முடியாமல், விடுதி ஒன்றில் தங்கியுள்ளேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என் குடும்பத்தினர் தான் பொறுப்பு.
என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளித்து, என்னை கொலை செய்ய துடிக்கும் எனது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிட்டுளளார் கிருஷ்ணாராவ்.
போலீசார் இப்போது கிருஷ்ணாராவின் உறவினர்களிடம் விசாரணைய மேற்கொண்டுள்ளனர்.

Wednesday, March 18, 2009

ஓவியம்


Tuesday, March 17, 2009

கவிதைகாதல் கவிதை
இரண்டு உதடுகள்
எச்சில் படுத்த
முடியாத
ஒரு
உன்னத உணர்வு
காதல் . .


வாழ்க்கை சோகம்

மனிதர்கள் வாழ்க்கை பெரும்பாடாக தான் உள்ளது பாவம் வாயில்லா ஜீவன்


Monday, March 16, 2009

நல்லதே நினை நல்லதே நடக்கும்

வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம் அந்த தொடர் ஓட்டத்தில் பள்ளமும் இருக்கும் முள்ளும் இருக்கும் நமது வாழ்க்கை பாதையை நன்மையாக மலரின் நர்மனம் போல் மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது ஆகையால் நல்லதே நினையுகள் நல்லதே நடக்கும்