Tuesday, July 14, 2009

உதிரபோக்கிலிருந்து ஸ்டெம் செல்களை தயாரிக்கலாம்ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில மாற்றங்களை சந்திக்கிறார்கள் .மன அழுத்தத்தால் அவதி படுகிறார்கள் . "இனிமே மனம் அழுத்தன்கிற பேச்சிக்கே இடமில்லை.


மாதவிடாய் நாட்களை சந்தோசமாக பெண்கள் எதிர்கொள்கிற காலம் வந்துடிச்சு.ஆமா இது பெண்களுக்கு மட்டும்மில்லை ,பலருக்கும் நன்மை தர போகுது" என்கிறார் லைப்செல் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான மயூர். இந்த நிறுவனம் ஸ்டெம் செல்களை சேகரித்து அதன்மூலம் பல மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறது "ஸ்டெம் செல்கல்னா பலருக்கு புரியறது இல்லை.


இது கடைல கிடைக்கிற சாதாரன மருந்து பொருள்கள் இல்லை .ஆனா , ஒருத்தரோட உடம்புல ஏற்படுற குறைபாட்டை நிச்சயமா போக்க ஸ்டெம் செல்கள் உதவும் . உதாரணத்துக்கு ரத்தம் சம்மந்தமான பிரச்சனை உடம்புல ஏற்படுதுன்னு வச்சுகோங்க .அதை ஸ்டெம் செல்கள் மூலமா குனபடுத்த முடியும் .இந்த செல்களை குறிப்பா குழந்தைகளோட தொப்புள் கொடியில் இருந்து எடுக்கிறார்கள் .

ஆனா ,இப்படி எடுக்கிற ஸ்டெம் செல்களை அந்த குழந்தைக்கோ அல்லது அந்த குழந்தையோட நெருங்கின உறவினர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.பாதிக்க பட்ட செல்களை எடுத்துட்டு அந்த இடத்தில் ஸ்டெம் செல்களை வைக்கிறப்ப பல தரப்பட்ட செல்களை உருவாக்க முடியும் . இதன்மூலமா உடல் குறைப்பாட்டை சரி செய்யமுடியும்.இப்படி குழந்தைகளோட தொப்புள் கொடியில் மட்டுமில்லை , மாதவிடாய் காலத்துல பெண்களுக்கு ஏற்படுகிற உதிரபோக்கிளிருந்தும் ஸ்டெம் செல்களை உருவாக்கமுடியும்னு கண்டு புடிச்சிருக்காங்க .

இந்த ஸ்டெம் செல்கள் உடல்ல ஏற்படுற டிஸ்யு பிரச்சனைகளை தீர்க்கும் .அதாவது எலும்பு சம்மந்தமான பிரச்சனை ,இதய தசை எலும்பு ,நரம்பு மண்டலம் ,உடம்புக்கு தேவையான அடிபோஸ் என்கிற கொழுப்பு செல்கள் பாதிப்பு . . . இதையெல்லாம் ஸ்டெம் செல்கள் மூலியமா குணம் படுத்த முடியும் .இதய பிரச்சனை ,பக்கவாதம் ஆஸ்டியோபோரோசிஸ் ,ஆல்சைமர் போன்ற பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க என்கிறார் மயூர்

Sunday, June 14, 2009

இருதய நோயை தடுக்கும் தக்காளி


உலக அளவில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலிடம் வகிக்கிறது இருதய நோய் .அவசரம் ,நெருக்கடி நிறைந்த வாழ்க்கை முறை ,தேவையான சத்துக்கள் இல்லாத துரிதவகை உணவுகள் ,மாறி வரும் தட்ப வெப்ப மற்றும் சுற்று புற சூழல் போன்றவை காரணமாக இருதய நோய் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
இருதய நோய்களை தடுக்கவும் ,ரத்தத்தில் சேரும் கொழுப்பு இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன .இந்த மருந்துகளில் பல முழுமையான பலனை அளிப்பதில்லை .
நோய் வரும் முன் தடுக்கும் வகையில் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள் .
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ச் பல்கலை கழகம் மற்றும் பிரிட்டிஷ் இருதய அமைப்பு சேர்ந்து புதிய மருந்து குறித்த ஆய்வுகளை மேற்க்கொண்டது .குறிப்பாக தக்காளியில் இருந்து இருதய நோய்க்கு மாத்திரை தயாரிக்கும் முயற்ச்சிகள் நடைபெற்றன .
உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் பழ வகையில் தக்களிக்கு முக்கிய இடம் உண்டு .தக்காளியில் 'லைகோபின்என்ற சத்துப்பொருள் உள்ளது .தக்காளி பலத்தின் தோலின் உள்ள இந்த சத்துப்பொருள் நோய் எதிர்ப்பு மருத்துவ குணம் கொண்டது . ரத்தக்குழாயில் கொழுப்பு சேருவதை இந்த லைகோபின் தடுக்கிறது .
இது தவிர ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் ,அதையும் கரைக்கும் குணம் இந்த லைகொபின்க்கு உள்ளது . மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் இது குறைக்கிறது .
லைகோபின் நிரந்த மாத்திரையை தக்காளியில் இருந்தே தயாரித்துள்ளனர் .இந்த மாத்திரையை இருதய நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்த போது நல்ல பலன்கள் கிடைத்தது .
தற்போது இந்த தக்காளி மாத்திரை தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் நடை பெற்று வருகிறது .விரைவில் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு கிடைக்கும் .

Monday, March 30, 2009

சூரிய குளியல்('சன் பாத்') நல்லதா?

வெளிநாட்டினர் உள்ளாடை அணிந்து கொண்டு கடற்கரையில் சூரிய குளியல் (சன் பாத் ) செய்கிறார்களே ...அதில் ஏதாவது பயன் உண்டா என்றால் இருக்கு .
பயன் இல்லாமலா முழு உடம்பையும் காட்டிக்கொண்டு கடற்க்கரை மணலில் குப்புற படுத்துக்கிடக்கிறார்கள்? நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான 'வைட்டமின்கள்' நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது .ஆனால் வைட்டமின் 'D'மட்டும் சூரிய ஒளியிலிர்ந்துகிடைக்கிறது.இந்த வைட்டமின் 'D'சூரியன் உதித்த இரண்டு மணிநேரத்திற்கு பின் ,சூரிய ஒளியில் உற்பத்தியாகிறது .சூரிய ஒளிநம் உடம்பின் மீது படும்போது தோலில் உள்ள 'ஏர் கோஸ்டி ரோல்ஸ் 'எனப்படும் வேதி பொருள் சூரியனுக்கும் நமக்கும் இடையே ஒரு தரகர் போல் செயல்ப்பட்டு சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் 'D' யை பெற்று தருகிறது .இந்த வைட்டமின் 'D'உடலுக்கு தேவையான அளவுதான் இருக்க வேண்டும் .அதிகமானால் உடம்பின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு ,பக்க விளைவுகள் உண்டாகும் .நம் தாய்மார்கள் நல்ல வெயில் அடிக்கும் நேரத்தில் மொட்டை மாடியில் வற்றல் ,வடாம் உலர்த்துவார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் வற்றல் ,வடாம்களில் சூரிய ஒளி பட்டு அதில் வைட்டமின்கள் 'D'பொதிந்து விடும் .உணவில் மூலமாகவும் வைட்டமின் 'D' கிடைக்க நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடுகளில் இதுவும் ஓன்று .கெட்டுப்போன ஊருக்காயை ஒரு மணி நேரம் வெயிலில் வைத்துவிடுங்கள் .வைட்டமின் 'D' அதை சுத்திகரிப்பு செய்து ஊருக்காயிக்கு புது வாழ்க்கை கொடுக்கும் .வீட்டுக்குள்ளேயும் அலுவலகத்திலும் அடைந்து இருப்பவர்கள் கொஞ்சம் சூரிய ஒளி படுமாறு நேரத்தை செலவிடுங்கள் .

Sunday, March 29, 2009

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்


ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
..... ஸ்பெஷல் ரிப்போர்ட்

ரஜினியின் அரசியல் நிலைப் பாடு என்ன? அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது தொடர்ந்து சினிமாதானா ...இதுதான் தற்போது தமிகத்தின் காஸட்லி கேள்வி.
இந்த கேள்வி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவசியமன ஒன்றாகிவிட்டது. ஒரே கேள்வியை பல கோணங்களில் அவரிடம் மீடியாக்களும் பல பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
1985ல் இருந்தே ரஜினியை நோக்கி இந்த கேள்வி கிளம்பிவிட்டது. இதற்கு 1992 முதல் ரஜினி பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
‘’நான் அரசியலில் நுழையப்போவதாகவும்... அப்படி இப்படின்னு பரபரப்பாக பேசிக்கிட்டு இருக்காங்க. எழுதிக்கிட்டு இருக்காங்க. கமல் இருக்கிறார். இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னை மட்டும் ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனா, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். அரசியல் என்பது புலி வால் புடிச்சது மாதிரி. அதை விடவும் முடியாது. விட்டால் கடிச்சு குதறிவிடும்.’’ இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த ஒரு பாராட்டுக்கூட்டத்தில் 1992ல் ரஜினி பேசியது.
பாட்சா படத்தின் நூறாவது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேச அப்போது முதல்வராக இருநத ஜெயலலிதா சீறி எழுந்தார். இதற்கு முன்பு ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவுக்காக நிறுத்தப்பட்ட டிராபிக்கில் ரொம்ப நேரம் காத்திருக்க விரும்பாத ரஜினி காரிலிருந்து இறங்கி தமது வீடடுக்கு நடந்து போனதால் எழுந்த சர்சையும் ஜெயலலிதாவின் கோபத்தை கிளறிவிடிருந்த நேரம் அது.
பிலிம் சிட்டிக்கு பெயர் வைப்பது குறித்து ரஜினி சொன்ன கமெண்ட் மேலும் அன்றைய முதல்வர் ஜெவை கோபம் கொள்ள வைத்தது. தொடர்ந்து அவரை சீண்டுவதாக ஜெவின் கட்சியினர் கருதினர். இதனால் ரஜினி மீதான விமர்சன தாக்குதல்கள் கடுமையாக எழுந்தன.
ஜெயலலிதா அரசாங்கம் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று எழுத்தாளர் சுஜாதா கேட்டபோது(1994), ‘’நல்லா ஆட்சி பண்றாங்க. ரொம்பத் திறமையான் லேடி. நல்ல நால்ட்ஜ் இருக்கு. எனக்கு உறுத்தற விசயம் இந்த கட் அவுட் பப்ளிசிட்டி இதெல்லாம்தான். இவ்வளவு இண்டெல்லிஜெண்ட்டான லேடிக்கு இது ஏன் புரியமாட்டேக்குது.ஆனா செய்யறதை சைலண்ட்டா அமைதியா செய்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். என்றார். அதே நேர்காணலில் ரஜினியின் அரசியல் பற்றி கேட்டார் சுஜாதா.
‘’அவுங்க எல்லாருக்குமே (ரசிகர்களுக்கு) நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற கேள்வி இருக்கு. இதற்கு தெளிவான பதிலை ஏன் சொல்லமாட்டேங்கிறேன்னு நினைக்கிறாங்க. நான் தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமல்ல. இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன் என்றால் நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலேயும் சொல்லமுடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யார்? வில்லன் யார்? என்று யாருமே சொல்லமுடியாது.’’என்றார்.
அவரது அரசியல் ஈடுபாடு குறித்து கேட்கப்பட்டபோது, ‘’கொஞ்சம் கூட இல்லை. எதுக்காக அரசியல் வேணும். பணம், புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யனும்....இதுதானே. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு இது எல்லாமே கிடைச்சிருக்கு. அரசியல் நிலைமையில் யாருக்கும் நல்லது செய்யமுடியாது. இது எனக்கு தெரியும்.’’என்றார்.
அரசியலுக்கு வந்தால் உங்கள் கைக்கு சக்தி வாய்ந்த பதவி வரும் இல்லையா? என்று கேட்டபோது, ‘’தனிமனிதனால எதுவும் சாதிக்கவே முடியாது. எல்லாமே மாறனும். ஒட்டு மொத்த அமைப்பே மாறனும். புது வெள்ளம்னு சொல்றாங்க இல்லையா..அது மாதிரி..அரசியல் அமைப்பே மாறனும். இப்ப இருக்குற சிஸ்டம்ல யாரலேயும் ஒன்னும் பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு. எம்ஜியாரை எடுத்துக்குங்க . வந்த முதல் இரண்டு வருடம் எப்படியிருந்தார். அதுக்கப்புறம் அவராலேயே ஒன்னும் செய்யமுடியவில்லையே.’’’ என்றார் ரஜினி.
முத்து படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் சில, ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தன. இதனால் ஜெவின் எதிர்ப்பும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களின் எதிர் தாக்குதலும் ரஜினியை நோக்கி திரும்பின. அதே நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது அவசியம் என்ற சூழல் ஏற்பட்டது. 1996ல் மக்களும் ரஜினிக்கு ஆதரவு தர தயாராக இருந்த நிலையில் எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினி அப்போது அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயித்திருக்கலாம். அப்போது அவர் வாய்ஸ் மட்டும் கொடுத்தார். அவர் வாய்ஸ் கொடுத்த திமுக கூட்டணி கட்சி ஜெயித்தது.
அடுத்த தேர்தலில் ஜெ ஆட்சிக்கு வந்தார். மறுபடியும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்தன. ’’ ரஜினி தனது படங்கள் வரும்போது எல்லாம் அரசியல் பேசுவார். அதுவரை அவர் பேச மாட்டார். இது அவருடைய வியாபார உக்தி.’’ என்கிறார் பத்திரிக்கையாளர் ஞானி.
சமீபகாலத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்ற சர்ச்சை பெரிதாக எழுந்திருப்பதற்கு காரணம், அவருக்கு பிறகு சினிமாவுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார், ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி எல்லாம் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்கள்.
அவர்களைவிட புகழ்பெற்ற நடிகரான ரஜினி ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இத்தனை யோசிக்கிறார் என்றுதான் அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சிதான் சமீபத்தில் ரஜினி ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கையும் என்னை யாரும் நிர்பந்திக்க கூடாது என்ற அறிக்கையும். ரஜினி எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அவரை பொறுத்தவரை எல்லாம் சரியாக நடக்கவேண்டும்.
இல்லை என்றால் கோபம் வந்துவிடும். தனது அரசியல் பிரவேசத்தால் படங்களின் வியாபாரம் பாதிக்கும், சொந்த வாழ்வில் நிம்மதியில்லாமல் போகும் என்று யோசித்துதான் அவர் அரசியலை வாய்ஸ் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்.
அது சரி, ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற கேள்வியை மறுபடியும் எழுப்புகிறவர்களுக்கு ரஜினியை ஓரளவுக்கு புரிந்து கொண்ட, ரஜினியுடன் பல தடவை நேரில் சந்தித்து பழகியிருக்கும் நக்கீரன் கோபால் சொன்னதுதான் நிஜமோ என்று நினைக்கத்தோன்றுகிறது
1999ல் இந்தியா டுடேவில் நக்கீரன்கோபால் சொன்னது : ‘’ரஜினிக்கு சொந்த அரசியல் அபிலாசைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தான் ஆட்சிக்கு வரனும். தனக்கு பதவி அதிகாரம் வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருப்பதாக நான் நினைகவில்லை. ஆனால் அவர் நேரடி அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு லாபம்னு நினைக்கறவங்க பலர் அவர் அரசியலுக்கு வரனும்னு விரும்பராங்க. மீடியாவும் அந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணுது’’.

நன்றி!நக்கீரன் நாளிதழ்

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார்.
இந்த 34 குழந்தைகளுக்கும் படிப்பு செலவு, சாப்பாடு, துணிமணிகள் என அனைத்து செலவுகளையும் ஏற்று இருக்கிறார்.
இது பற்றி பிரீத்தி ஜிந்தா,
’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.
அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன்.
தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.
அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள்.
பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும்.
நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.
நிழல்கள் நிஜமானால் நன்மையே
நன்றி நக்கீரன் நாளிதழ்

மனிதகுரங்கு

'சிம்பன்சி' என்ற மனிதகுரங்கின் நடவடிக்கைகளை பார்த்தால் ஒரு மனிதனை போலவே இருப்பதற்கு என்ன காரணம் ?

'சிம்பன்சிகுரங்கு 99 சதவீதம் மனிதன் . மனிதனின் மரபணுக்களையும் (DNA) ஒரு சிம்பன்சியின் மரபணுக்களையும் ஒப்பிட்டு பார்த்த உயிரியியல் சைண்டிஸ்ட் அசந்து போனார்கள் .காரணம் இரு மரபணுக்களும் 99 சதவீதம் ஒரேமாதிரியாய் இருந்தது தான்! மனிதனையும் ,மனிதகுரங்கையும் வேறுப்படுத்தி காட்டுகிற மீதி ஒரு சதவீதம் எது என்பதை கிளறி பார்க்க ஆரம்பித்தார்கள் .அதற்காக ஒரு சோதனை குழாயில் மனிதனின் மரபணுக்களையும்,மனிதகுரங்கின் மரபணுக்களையும் ஓன்று சேர்த்து ஒரு உயிரை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் .வெற்றிகிடைப்பது போல் தோன்றி பிறகு அது தோல்வியில் முடிந்தது .
தோல்விக்கு காரணம் அந்த ஒரு சதவீத வித்தியாசம் தான் .இந்த வித்தியாசமே நம்மையும் மனிதகுரங்கையும் பெரிய இடைவெளியில் பிரித்து வைத்து இருக்கிறது .குரங்கு குரங்கு தான் ! மனிதன் மனிதன் தான் ....! காரணம் ,மனித குரங்கின் மரபணுக்கள் மொத்தமும் 48 குரோமோசோம்களில் அடங்குகின்றன. ஆனால் மனிதனின் மரபணுக்கள் 46 குரோமோசோம்களில் அடங்கிவிடுகின்றன .
நல்ல வேலை ....தப்பித்தோம் என்றீர்களா ?
நன்றி ராணி வார இதழ் .

பெண்களே :தள்ளிபோடதீர்கள்

மாதவிலக்கு : தள்ளிபோடாதீர்கள்!
பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்ப்படுவது குறிப்பிட்ட வயது வரை தவிர்க்க முடியாது .பெண்களின் உடல்வாகை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதவிலக்கு காலம் மாறுபடலாம் .
ஆனால் ,சில பெண்கள் மாதவிலக்கு முறையாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள் . இதே போல் சில பெண்கள் கோவிலுக்கு போக வேண்டும் என்பதற்க்காகமாதவிலக்கை தள்ளி போடும் மாத்திரைகள் சாப்பிட்டு பழகிவிடுகிறார்கள் .இன்னும் சில பெண்கள் தேர்வு நேரங்களிலும் ,வெளியிடங்களுக்கு செல்வதற்காக மாதவிலக்கை தள்ளிபோட மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் .
இப்படி அடிக்கடி மாத்திரையை போட்டு அதையே தங்களுக்கு வழக்கமாகவும் ,பழக்க மாகவும் ஆக்குகிறார்கள் .இது நாளடைவில் கருப்பை பாதிப்பை உண்டாக்கும் .அதிக ரத்தபோக்கு ,மாதவிலக்கு சீராக வராமல் போவது போன்றவற்றை ஏற்படுத்தும் .
எனவே கூடுமானவரை மாதவிலக்கை தள்ளிபோடும் மாத்திரைகளை தொடர்ந்து போடுவதை பெண்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது .
நன்றி! ராணி வார இதழ் .