Thursday, March 19, 2009

கவித்தலைவன்

கவித்தலைவன்
கள்ளிக்காட்டில் கால்சட்டை
வயதில் ஐம்பெரும் காப்பியங்கள்
முடித்தவன் அவன்
வைகறை ஆற்றின் வடதிசையில்
மாடுகள் நுனி புல் மேயும் போது
தமிழின் அடி ஆழம் வரை
படித்தவன் என் கவித்தலைவன் அவன்

காதல் செய்தவளை சாதி மதம்
எதிர்த்து கைபிடித்தவன்
இன்னும்காதலிப்பவான்
அவளை மட்டும்
என் என் கவித்தலைவன் அவன்

வெள்ளை காகிதத்தில்
இவன்எழுதுகோல் தலை சாய்ந்த போதெல்லாம்
தமிழ் மொழி தலைநிமிரும்
என் கவித்தலைவன் அவன்
சமுத்திர அளவு கடக்க நினைத்து
ஒரு குடுவைக்குள் சிறைப்பட்டவன்
வானம் ஏறி
கவிதை சொல்ல புறப்பட்டவன்
ஒரு குளிர் அறையில் மட்டும்
பாடல் எழுதி வருபவன் என்
கவித்தலைவன் அவன்

தமிழ் மட்டும் அல்லாமல்
அறிவியல் , இலக்கியம் , பொதுஅறிவு ,
வேதாந்தம் , சித்தாந்தம் , மருத்துவம் ,
என அனைத்திலும் ஆணி வேர்வரை
கற்றவன்
என் கவித்தலைவன் அவன்

காதல் , கல்வி , வாழ்க்கை
அனைத்திலும் அவனை போல
வாழ ஆசை
காரணம் என்
தலைவன் அவன் !!!
வைரமுத்து !!!

No comments:

Post a Comment