Tuesday, March 24, 2009

கோபம்

கோபம் ஏன் வருகிறது என்று யாரிடமாவது கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து பதில் வருவது தெரியவில்லை சரி அதற்க்காக சிறிய கதை படித்ததை எழுதுகிறேன்.

கதை : ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தம்பதியர்க்கு ஒரு ஆண் பிள்ளை இருந்தான் , அவனுக்கோ அளவுக்கு அதிகமாக கோபம் ஆட்கொண்டது . அடிக்கடி கோபம் வரும் போதுகையில் எதுகிடைத்தாலும் உடைத்து விடுவான் பள்ளியிலும் சரி நண்பர்களோடு எப்பபாத்தாலும் சண்டை வீட்டிலும் அம்மா அப்பா இரண்டு பேரிடமும் கோபம் கொண்டான். அந்த கிராமத்தில் எல்லோரிடமும் எல்லா தெருக்கலில் உள்ள தம்பதியர்களோடு பிள்ளை களோடு சண்டை போட்டதால் எல்லோரும் வீட்டுக்கு வந்து சண்டை போட்டனர் .அம்மாவால் வழக்காட முடியவில்லை எவ்வளவோ சிறுவனை அந்த தம்பதியினர் சமாதான படுத்தியும் முடியவில்லை.எவ்வளோவோ டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பார்த்தனர் பணம் செலவாகியதே தவிர சிறுவனுடைய கோபம் தணியவில்லை

அவனிடமே ஏன் இப்படி உனக்கு கோபம் வருகிறது என்று கேள்வி கேட்டால் என்னனு தெரியல திடிர்னு வருது என்றான் அவனுடைய அம்மாவால் ஒண்ணுமே பண்ண முடியல மகன் இப்படி இருக்கிறானே என்று ரொம்ப மன கஷ்டம் பட்டார் அம்மா , கடைசியில் ஒரு மகரிஷி இடம் அழைத்து சென்றனர் மகரிஷியிடம் அம்மா தன்னுடைய மகனுடைய குறைகளை சொல்லி கண்ணீர் வடித்தார் .

மகரிஷி சிறுவனை தனியாக அழைத்தார் சிறுவனிடம் மகரிஷி ஏன் உனக்கு கோபம் வருகிறது என்று கேட்டார் அதற்கு சிறுவனுடைய பதில் தெரியவில்லை என்பதாகவே இருந்தது கோபம் வருவதற்கான காரணம் உனக்கு தெரியவில்லை நான் கூறுகிறேன் என்றார் ஒருவன் பிறந்ததிலிருந்து வாழ்க்கை முடிவு வரை பலவிதமான ஆசைகள் அவனுடைய மனதில் தோன்றுகின்றன அதில் சில நிறைவேறுகின்றன பல நிறைவேறுவதில்லை ஆகையால் ஏமாற்றங்கள் தான் மிஞ்சுகின்றன வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அதிக்கரிக்க அதிகரிக்க மனதில் ஒரு பக்கம் சேகரிக்க பட்டு மனவளிமயினுடைய எல்லையை தாண்டும்போது கோபமாக வெளிபடுகின்றன .ஆகையால் ஆசைகளை குறைத்து வாழ்ந்தால் வாழ்க்கை மலரின் நர்மனம் போல் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் அமையும் என்று சிறுவனிடம் கூறினார் மகரிஷி.

சிறுவனின் நிறைவேறாத ஆசைகளை கேட்டார் மகரிஷி ,ஆசைகளை கூறினான் அதை ஒரு பேப்பரில் பட்டியலிட்டார் சிறுவனுடைய அம்மாவை அழைத்தார் அந்த அம்மாவிடம் உங்களுடைய மகனுடைய ஆசைகள் இந்த பேப்பரில்எழுதிஉள்ளேன்.அதை நிறைவேற்றுங்கள் உங்களுடைய மகன் குறைகள் சரியாயிடும் என்றார் மகரிஷி .சிறுவனுடைய தம்பதியினர் மகரிஷி சொன்னது போல் சிறுவனுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினர் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ஆகையால்ஆசைகளை குறைத்தால் வாழ்க்கை வசந்தமாக அமையும் .

No comments:

Post a Comment