Tuesday, July 14, 2009

உதிரபோக்கிலிருந்து ஸ்டெம் செல்களை தயாரிக்கலாம்



ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில மாற்றங்களை சந்திக்கிறார்கள் .மன அழுத்தத்தால் அவதி படுகிறார்கள் . "இனிமே மனம் அழுத்தன்கிற பேச்சிக்கே இடமில்லை.


மாதவிடாய் நாட்களை சந்தோசமாக பெண்கள் எதிர்கொள்கிற காலம் வந்துடிச்சு.ஆமா இது பெண்களுக்கு மட்டும்மில்லை ,பலருக்கும் நன்மை தர போகுது" என்கிறார் லைப்செல் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான மயூர். இந்த நிறுவனம் ஸ்டெம் செல்களை சேகரித்து அதன்மூலம் பல மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறது "ஸ்டெம் செல்கல்னா பலருக்கு புரியறது இல்லை.


இது கடைல கிடைக்கிற சாதாரன மருந்து பொருள்கள் இல்லை .ஆனா , ஒருத்தரோட உடம்புல ஏற்படுற குறைபாட்டை நிச்சயமா போக்க ஸ்டெம் செல்கள் உதவும் . உதாரணத்துக்கு ரத்தம் சம்மந்தமான பிரச்சனை உடம்புல ஏற்படுதுன்னு வச்சுகோங்க .அதை ஸ்டெம் செல்கள் மூலமா குனபடுத்த முடியும் .இந்த செல்களை குறிப்பா குழந்தைகளோட தொப்புள் கொடியில் இருந்து எடுக்கிறார்கள் .

ஆனா ,இப்படி எடுக்கிற ஸ்டெம் செல்களை அந்த குழந்தைக்கோ அல்லது அந்த குழந்தையோட நெருங்கின உறவினர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.பாதிக்க பட்ட செல்களை எடுத்துட்டு அந்த இடத்தில் ஸ்டெம் செல்களை வைக்கிறப்ப பல தரப்பட்ட செல்களை உருவாக்க முடியும் . இதன்மூலமா உடல் குறைப்பாட்டை சரி செய்யமுடியும்.இப்படி குழந்தைகளோட தொப்புள் கொடியில் மட்டுமில்லை , மாதவிடாய் காலத்துல பெண்களுக்கு ஏற்படுகிற உதிரபோக்கிளிருந்தும் ஸ்டெம் செல்களை உருவாக்கமுடியும்னு கண்டு புடிச்சிருக்காங்க .

இந்த ஸ்டெம் செல்கள் உடல்ல ஏற்படுற டிஸ்யு பிரச்சனைகளை தீர்க்கும் .அதாவது எலும்பு சம்மந்தமான பிரச்சனை ,இதய தசை எலும்பு ,நரம்பு மண்டலம் ,உடம்புக்கு தேவையான அடிபோஸ் என்கிற கொழுப்பு செல்கள் பாதிப்பு . . . இதையெல்லாம் ஸ்டெம் செல்கள் மூலியமா குணம் படுத்த முடியும் .இதய பிரச்சனை ,பக்கவாதம் ஆஸ்டியோபோரோசிஸ் ,ஆல்சைமர் போன்ற பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க என்கிறார் மயூர்

2 comments: