Sunday, June 14, 2009

இருதய நோயை தடுக்கும் தக்காளி


உலக அளவில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலிடம் வகிக்கிறது இருதய நோய் .அவசரம் ,நெருக்கடி நிறைந்த வாழ்க்கை முறை ,தேவையான சத்துக்கள் இல்லாத துரிதவகை உணவுகள் ,மாறி வரும் தட்ப வெப்ப மற்றும் சுற்று புற சூழல் போன்றவை காரணமாக இருதய நோய் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
இருதய நோய்களை தடுக்கவும் ,ரத்தத்தில் சேரும் கொழுப்பு இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன .இந்த மருந்துகளில் பல முழுமையான பலனை அளிப்பதில்லை .
நோய் வரும் முன் தடுக்கும் வகையில் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள் .
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ச் பல்கலை கழகம் மற்றும் பிரிட்டிஷ் இருதய அமைப்பு சேர்ந்து புதிய மருந்து குறித்த ஆய்வுகளை மேற்க்கொண்டது .குறிப்பாக தக்காளியில் இருந்து இருதய நோய்க்கு மாத்திரை தயாரிக்கும் முயற்ச்சிகள் நடைபெற்றன .
உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் பழ வகையில் தக்களிக்கு முக்கிய இடம் உண்டு .தக்காளியில் 'லைகோபின்என்ற சத்துப்பொருள் உள்ளது .தக்காளி பலத்தின் தோலின் உள்ள இந்த சத்துப்பொருள் நோய் எதிர்ப்பு மருத்துவ குணம் கொண்டது . ரத்தக்குழாயில் கொழுப்பு சேருவதை இந்த லைகோபின் தடுக்கிறது .
இது தவிர ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் ,அதையும் கரைக்கும் குணம் இந்த லைகொபின்க்கு உள்ளது . மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் இது குறைக்கிறது .
லைகோபின் நிரந்த மாத்திரையை தக்காளியில் இருந்தே தயாரித்துள்ளனர் .இந்த மாத்திரையை இருதய நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்த போது நல்ல பலன்கள் கிடைத்தது .
தற்போது இந்த தக்காளி மாத்திரை தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் நடை பெற்று வருகிறது .விரைவில் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு கிடைக்கும் .

No comments:

Post a Comment